சிறப்பு வகுப்பை தவறவிட்ட சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நீதிபதி!!! – உயர் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!!

சிறப்பு சிறப்பு வகுப்பை தவறவிட்ட சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நீதிபதி!!! – உயர் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!! தவறவிட்ட சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நீதிபதி!!! – உயர் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!!

குழந்தையை தனது பாதுகாப்பில் வைத்து வளர்ப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று நீதிபதி C.V.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக மனுதாரர் தனது குழந்தையை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தார். குழந்தையிடம் நீதிபதி பேசியபோது, சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு வருவதாகவும், நீதிமன்றத்திற்கு வருவதற்காக வகுப்பிற்கு செல்லவில்லை எனவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் மனுதாரர் மீது கோபமடைந்த நீதிபதி கார்த்திகேயன் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய வேண்டாம் என மனுதாரரின் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியதுடன், அவற்றை கருத்தில் கொள்ள வேண்டாமென பதிவுத்துறைக்கும் அறிவுறுத்தினார்.

பின்னர் அந்த சிறுமியை அழைத்த நீதிபதி கார்த்திகேயன், சிறப்பு வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போது, தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் நிலை ஏற்பட்டத்தற்காக மன்னிப்பு கோரினார்.

சிறுமியிடம் மன்னிப்பு நீதிபதியின் இந்த எண்ணம் அங்கிருந்தோரை நெகிழச் செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

You may also like...