சென்னை உயர்நீதிமன்றத்தை விடுமுறை தினமான நேற்று சனிக்கிழமை அணுகி தனது வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி திருமதி ஆர் என் மஞ்சுளா தனது இல்லத்தில் விசாரணையை மேற்கொண்டார்

[2/19, 11:03] sekarreporter1: சென்னை திருவொற்றியூரை சேர்ந்த பள்ளி மாணவி அபிநயா காதில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக பிரசாத் ENT என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் பரிந்துரையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அறுவை சிகிச்சை முடிந்த அன்று மாலை மாணவி தனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் தாயாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அதே மருத்துவமனையில் நேர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது அதற்குப் பின்பும் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படாததால் மருத்துவரின் பரிந்துரையில் அந்த மாணவி சுகன் ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டார் பிறகு அங்கும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் கவலைக்கிடமான நிலையில் இருந்த காரணத்தினால் மருத்துவர்கள் மாணவியை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை கொடுக்கப்பட்டும் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த 17ஆம் தேதி மாணவியின் உயிர் பிரிந்தது. இதனை அடுத்து மாணவியின் தாயார் நந்தினி பிரசாந்த் ENT மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவொற்றியூர் காவல் நிலையத்தை அணுகினார் அங்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்ததால் மாணவியின் தாயார் சாலை மறியல் செய்ய முற்பட்டார் அங்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள் மாணவியின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடற்கூறாய்வு மூணு மருத்துவர்கள் கொண்ட குழுவால் மேற்கொள்ளப்பட்டது அந்த உடற்கூறாய்வை கேமரா மூலம் பதிவும் செய்யப்பட்டது. இருந்தும் மாணவியின் தாயார் நந்தினி உடற்கூறாய்வு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கை விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை விடுமுறை தினமான நேற்று சனிக்கிழமை அணுகி தனது வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி திருமதி ஆர் என் மஞ்சுளா தனது இல்லத்தில் விசாரணையை மேற்கொண்டார் அப்போது இறந்த மாணவி தரப்பில் பிரேத பரிசோதனை சரியான முறையில் செய்யப்படவில்லை என்றும் வழக்கை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் விசாரித்தால் தகுந்த நியாயம் கிடைக்காது என்றும் வாதிடப்பட்டது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திரு ராஜ் திலக் பிரேத பரிசோதனை மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவால் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதனை வீடியோவாக பதிவும் செய்யப்பட்டது என்றார் மேலும் திருவொற்றியூர் காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார் மேலும் நீதிபதி கேட்டுக்கொண்டதன் பேரில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் திருமதி மங்கையர்கன்னி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து விளக்கமாக கேட்டறிந்தார் இறந்த மாணவியின் உடல் உறுப்புகளின் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனை தடையறிவியலுக்கு அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்த விபரங்களை கேட்டறிந்த நீதிபதி இறந்த மாணவியின் உடற்கூறாய்வு சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது அதனால் மறு உடற்கூறாய்வு அவசியம் அற்றது என்று கூறினார். இதனை அடுத்து அரசு தரப்பில் வழக்கை புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றி உதவியாளர் ஆணையர் தலைமையில் விசாரணையை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டது இதனை ஏற்றுக் கொண்ட இறந்த மாணவியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதனைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மேலும் நீதிமன்றம் இது போன்ற மருத்துவர்கள் அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்று ஜேக்கப் மேத்யூ என்ற வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
[2/19, 11:03] sekarreporter1: 🌹

You may also like...