நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், சக்திவேல் No Helmet reduced compensation வித்யாசமான order

திருப்பத்துார் வாணியம் பாடி அருக இரு சக்கர வாகனத்தில் ராணுவ வீரர் தனது மனைவியுடன் 2017ம் ஆண்டு சென்று கொண்டுஇருந்தார். அப்போது  எதிரே வந்த இரு சக்கரவாகனத்தில் மோதி அதே இடத்தில் பலியானார். அவரது மனைவி உயிர் தப்பினார். இதற்கு இழப்பீடு கோரி திருப்பத்துார் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழங்கும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு மைனர் மகளும் ஒரு மைனர் மகனும் உள்ளனர். எனவே உரிய இழப்பீடு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த  திருப்பத்துார் கோர்ட் விதவை பெண் அவரது இரண்டு குழந்தைகளுக்கு ரூ.89 லட்சத்து 49 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவிட்டது.

 ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய ராணுவ வீரருக்கு இழப்பீடு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை குறைக்க வேண்டும் என்று கோரி  யுனைடெட் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம்  நிறுவனம் ஐகோர்ட்டில்  அப்பீல் செய்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், சக்திவேல் ஆகியோர் ஹெல்மட் அணியாமல்  இரு சக்கர வாகனத்தை ராணுவ வீரர் ஓட்டி சென்றது தெளிவாக தெரிகிறது. எனவே ரூ.89 லட்சம் இழப்பீடு தொகையை 15 சதவீதம் குறைக்கிறோம். அதன்படி குறைத்து  ரூ.76 லட்சத்து 6ஆயிரத்தை விதவை பெண்ணுக்கும் அவரது மைனர் குழந்தைகளுக்கும் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

You may also like...