Judge sathis kumar bench கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற் சூளைகள் இயங்க அனுமதித்த சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற உத்தரவை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க மறுத்து விட்டது.

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற் சூளைகள் இயங்க அனுமதித்த சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற உத்தரவை நீட்டித்த சென்னை உயர் நீதிமன்றம், செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க மறுத்து விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கவும், யானைகள் வழித்தடங்களில் உள்ள செங்கற்சூளைகளை அகற்றக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கற் சூளைகளை தொடர்ந்து செயல்பட அனுமதித்து உத்தரவிட்ட சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தடாகம் பள்ளத்தாக்கில் எந்த சூளைகளும் செயல்பட அனுமதிக்கவில்லை எனவும், இந்த செங்கற்சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு நிர்ணயிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குழு அமைத்துள்ளதாகவும், வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாகவும், சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவை நிறுத்தி வைக்கும்படி பசுமைத் தீர்ப்பாயமும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அபராதத்தை செலுத்தி விடுவதாகவும், செங்கற்சூளைகளில் செய்து வைக்கப்பட்டுள்ள செங்கல்களை எடுக்க அனுமதிக்க வேண்டும் என செங்கற்சூளைகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எந்த அனுமதியும் இன்றி செங்கற்சூளைகள் செயல்பட்டது சட்டவிரோதமானது அல்லவா? அபராதம் செலுத்தி விட்டு, சட்ட விரோத செயல்களை செய்யலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், செங்கற்சூளைகள் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்கும்படி, பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதுவரை, அபராதத் தொகையை செலுத்தி விட்டு செங்கற்களை எடுத்துச் செல்ல அனுமதித்த சுரங்கத் துறை ஆணையர் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

You may also like...