Madras high court news

[01/02, 15:44] sekarreporter1: சாதி மத மற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என்றும் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி மத மற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும்,அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் எனவே சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்பு நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் , சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சாதி மத மற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டக்குரியது என தெரிவித்தார்.
அதேவேளையில் இதுபோல் வழங்கினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சான்றிதழை வழங்குவது, சொத்து வாரிசுரிமை மற்றும் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசு உத்தரவுப்படி
கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில்,
சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம் என்றும் அதற்கான உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் ..அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது இன்னும் சுட்டிக்காட்டி உள்ளார் ..
சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்
[01/02, 16:28] sekarreporter1: வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அரசு முடிவெடுத்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் வழக்கில் இணைக்கும்படி மூன்றாவது நபர் கோர முடியாது என்றும், இதுநாள் வரை வழக்கில் இணைக்க கோராத ஜெயவர்த்தன், வாபஸ் பெற முடிவு செய்த பின் வழக்கில் இணைக்க கோரியுள்ளது தவறு என்றும் மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.

ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக இருந்தால் எதிர்மனுதாரர் கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்ற நிலையில், மூன்றாம் நபர் எப்படி எதிர்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில் அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது என்றார்.

ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொதுநலன் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? உயர் நீதிமந்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும், தற்போது அரசு எந்த காரணமும் தெரிவிக்காமல் வாபஸ் பெறக் கோருவதால் வழக்கில் இணைக்க கோருவதாக குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பியபோது, இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைப்பதாகவும், 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்ததாகவும், அதற்கு முன் வாபஸ் பெறும் எண்ணம் இல்லாததால் வழக்கில் இணைக்க கோரவில்லை எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, வாதங்களின் தொடர்ச்சிக்காக விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[01/02, 16:29] sekarreporter1: நீதிமன்ற வளாகத்தில் மொபைல் நெட்வொர்க்-களை மேம்படுத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தும்போது போதிய நெட்வெர்க் கிடைக்கவில்லை என்பதால், நெட்வொர்க்கை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருமுல்லைவாயலை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தமிழக அரசு, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தககல் செய்துள்ள பொது நல மனுவில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடங்களில் இருந்து மொபைல் போன்களில் இணையதள சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றும், காணொலி மூலமாக மற்றொரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக சிரமமாக இருப்பதாகவும், உயர் நீதிமன்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை கூட முழுமையாக பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளதால், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி உத்தர பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...