Madras high court orders savuku case one lakh fine case tender case

[9/7, 19:36] Sekarreporter1: சென்னை, செப்.8&

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சர்புன்நிஷா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&
எனக்கும் அப்துல் ரசாக் என்பவருக்கும் கடந்த 2007&ம் ஆண்டு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. எங்களுக்கு 14 மற்றும் 12 வயதுகளில் மகள், மகன் உள்ளனர். என் கணவருடன் குடும்ப தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதால், அவர் மீது போலீசில் புகார் செய்தேன். மேலும், திருவள்ளூர் மாவட்ட முஸ்லிம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டியிடம், குடும்ப பிரச்சினை தொடர்பாக சமரசம் செய்து, கணவருடன் சேர்த்து வா–ழ வைக்கும்படி முறையிட்டேன். ஆனால், இந்த கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 25&ந்தேதி இந்த கமிட்டி எனக்கு கடிதம் அனுப்பி, மார்ச் 8&ந்தேதி பொன்னேரியில் உள்ள மரியாம் மதீனா பள்ளிவாசலுக்கு வரும்படி கூறியிருந்தனர். ஆனால், நான் அன்று போக வில்லை. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட முஸ்லீம் ஜமாத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள திருவள்ளூர் மாவட்ட காஜி முகமது அலி, என் கணவருக்கு தலாக் (விவாகரத்து) சான்றிதழ் வழங்கி விட்டார். இதை வைத்துக் கொண்டு, என் கணவர் அவசர அவசரமாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து விட்டார். இதனால், நானும், என் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். சட்டவிரோத கட்டபஞ்சாயத்துக்கு போக வில்லை என்ற காரணத்தால், இந்த கமிட்டி இவ்வாறு செயல்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த கமிட்டி நீதிமன்றத்துக்கு இணையாக இதுபோன்ற பிரச்சினைகளை பொன்னேரி பள்ளிவாசலில் வைத்து விசாரிக்கிறது. இந்த ஐகோர்ட்டு கடந்த 2016&ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பில், கோவிலோ, தேவாலயமோ, மசூதியோ எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், அது வழிப்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுபோல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே கூறியுள்ளது.
எனவே, பொன்னேரி மசூதியில் கட்டபஞ்சாயத்து செய்ய தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு விசடாரணை முடியும் வரை, தலாக் சான்றிதழை வழங்க கூடாது என்று திருவள்ளூர் மாவட்ட காஜி முகமது அலிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ÔÔமனுதாரர் கூறும் காரணத்துக்கு முகாந்திரம் இருப்பதால், திருவள்ளூர் மாவட்ட காஜி முகமது அலி, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு மத்திய சட்டத்துறை, மாநில உள்துறை செயலாளர்கல், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்ÕÕ என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22&ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்,
……………..
[9/7, 21:14] Sekarreporter1: தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016 ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது எனவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதே நடைமுறைப்படி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது எனவும், அதேசமயம் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெறும் உரிமையை மறுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு, அதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகவில்லை என்றால் எத்தனை இடங்கள் நிரப்ப வேண்டுமோ, அத்தனை இடங்களில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்குகளை முடித்து வைத்தனர்.
[9/8, 11:42] Sekarreporter1: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டரை எதிர்த்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி மேட்டூர் நகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் மேற்கொள்ளப்படும் 36 வகையான பணிகளுக்கு தனித்தனியாக நான்கு மாதங்களுக்கு டெண்டர்கள் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை மாற்றி ஐந்து ஆண்டுகளுக்கு சேர்த்து அனைத்து பணிகளையும் ஒரே காண்ட்ராக்டரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைப்படி ஐந்து ஆண்டுகளுக்கு 155 முதல் 160 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், ஒரு சதவீத முன்பணமாக 3 கோடியே 99 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ள நிலையில் இப்பணிகளுக்கான செலவு என்பது 399 கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் கோரும் முன் அதற்கான மதிப்பீடுகள் ஏதும் செய்யப்படவில்லை என்பதால் இந்த டெண்டரை சட்டவிரோதமானது என அறிவிக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆகியோர், மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறியிருப்பதாகவும், இந்த வழக்கு அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

இதையடுத்து, டெண்டர் நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் விளக்கவில்லை எனவும், டெண்டர் நிபந்தனைகளை பொறுத்தவரை அது அரசின் கொள்கை முடிவு எனவும், டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணாக டெண்டர் நிபந்தனைகள் இல்லை என்பதால், இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[9/8, 12:03] Sekarreporter1: ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தை பற்றி சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடைவிதிக்க கோரி தென்னிந்தியாவை சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் சார்பில் அதன் அதிகாரம் பெற்ற நபரான என்.விவேகானந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகள் காரணமாக, தங்களது நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களில் 28 பேர், முன்பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 15 கோடி ரூபாய் திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் தங்களுக்கு இது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதனால் மான நஷ்டஈடாக ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ச்சியாக ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும், தொழில் குறித்தும் சவுக்கு சங்கர் அவதூறாக பேசி வருவதாக, அந்நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், பொள்ளாச்சியில் தங்களது நிறுவனத்திற்கு எந்த திட்டமும் இல்லாத நிலையில் முதலமைச்சர் பயணத்தை தங்களது நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தி சவுக்கு சங்கர் பேசியிருப்பதாகவும் ஜி ஸ்கொயர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/8, 19:42] Sekarreporter1: கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள முனிஷ்வர்நாத் பண்டாரி கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் செயல்படும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகள் அல்லது 70 வயது வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் அந்த பதவியில் இருப்பார் எனவும் மாத ஊதியமாக இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி வரும் 12ம் தேதியுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
[9/8, 20:43] Sekarreporter1: இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பா.ம.க.வை சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் வசந்த், சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மேட்டூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான பா.ம.க.-வை சேர்ந்த சதாசிவம் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆகஸ்டு 24ஆம் தேதி பா.ம.க., பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ, சதாசிவம் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும், சாதி பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாகவும் பேசினார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த புகார் மீது சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலையத்தினர் , இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சதாசிவம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் உள்நோக்கம் காரணமாக இதுபோன்ற புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த புகார் அடிப்படை ஆதாரம் இல்லாத புகார் எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன் ஜாமீன் வழங்க காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எம்.எல்.ஏ சதாசிவத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
[9/8, 20:44] Sekarreporter1: நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இவர், 2 படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த சினிமா படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்ததாகவும், இந்த 2 படங்களும் சரியாக ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும்
திரைப்படத்தை130 கோடிக்கு விற்ற அவர், வங்கிக் கடனை செலுத்தாமல் மற்ற கடன்களை செலுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து கடனுக்காக அடமானம் வைத்த அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து கடன் வசூலிப்பு தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்து இடைக்கால நிவாரணம் பெற்றார்.

இறுதியாக கடந்த ஜூன் 24ம் தேதி ஏலம் குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தெடர்ந்தார். அதில், கடன் பாக்கித் தொகை .37.90 கோடி ரூபாயை ஒரே தவணையில் செலுத்துவதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆர்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர் கடன் தொகையை திருப்பி செலுத்த வில்லை. மேலும் உயர்நீதிமன்றத்தை தவறான பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஆஸ்கார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன், உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்ப டுத்தி வந்துள்ளார். எனவே, அவருக்கு .1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

You may also like...