madras high court today Feb 10th orders

[10/02, 13:56] sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE D.KRISHNAKUMAR andTHE HONOURABLE MR.JUSTICE R.VIJAYAKUMARW. P.(MD) No.2687 of 2024andW.M.P.(MD) No.2700 of 2024M.Nagarajan … Petitioner-vs-1.The TahsildarPalani Taluk Office Dindigul District2.The Executive Officer / Joint CommissionerHindu Religious and https://sekarreporter.com/the-honourable-mr-justice-d-krishnakumar-andthe-honourable-mr-justice-r-vijayakumarw-p-md-no-2687-of-2024andw-m-p-md-no-2700-of-2024m-nagarajan-petitioner-vs-1-the-tahsildarpalani-taluk/
[10/02, 15:23] sekarreporter1: Temple case order THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM https://sekarreporter.com/temple-case-order-the-honourable-mr-justice-s-m-subramaniam/
[10/02, 15:24] sekarreporter1: சென்னை, பிப். 11: கிண்டி தொழிற்பேட்டையில் ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்திடம் உள்ள அரசுக்கு சொந்தமான 62,237 சதுர அடி நிலத்தை 2 மாதங்களில் மீட்க நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறு தொழில் கழகத்திற்கு (டான்சி) சொந்தமான 62,237 சதுர அடி நிலத்தில் ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்திற்கு கடந்த 1981 செப்டம்பர் 9ம் தேதி மாதம் ரூ.12,036 என்ற வாடகைக்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலத்தையும் அதில் உள்ள கட்டிடத்தையும் ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் பிளாஸ்க் மற்றும் அது தொடர்பான பொருட்களையும் தயாரிக்க பயன்படுத்தி வந்தது. இந்த நிறுவனத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு 2001 டிசம்பர் 21ம் ேததி வரை லைசென்ஸ் தரப்பட்டது. இந்த நிறுவனத்தை கடந்த 2006 பிப்ரவரி 22ம் தேதி ஆய்வு செய்த தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்தின் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டது என்று கூறி அந்த நிறுவனத்தின் பெயரை தொழிற்சாலைகள் ஆவணங்களில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தொடர்ந்து அந்த நிலத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இதையடுத்து, அந்த நிலத்தை காலி செய்யுமாறு டான்சி நிறுவனம் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் தங்களது லைசென்ஸ் அப்போதைக்கப்போது புதுப்பிக்கப்பட்டு தொழிற்சாலை இயங்கி வருவதாகவும் தற்போது 15 தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த 14வது சிறுவழக்குகள் நீதிமன்றம் டான்சி தொடர்ந்த வழக்கை 2007 மார்ச் 2ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டான்சி மேல் முறையீடு ெசய்தது. இந்த மேல் முறையீடு வழக்கு 7வது சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.ரமன்லால், வழக்கறிஞர் பி.சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகி, அரசுக்கு சொந்தமான சம்மந்தப்பட்ட நிலத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் பயன்படுத்தவில்லை. அந்த நிறுவனத்தில் பிளாஸ்க் தயாரிக்கப்படவில்லை. 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உயர் அழுத்த மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக மாற்றப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் நடத்திய ஆய்வில் ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்தில் 3 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். அந்த நிறுவனம் தற்போது உற்பத்தியை நிறுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, டான்சிக்கு சொந்தமான இடத்தை ஈகிள் பிளாஸ்க் நிறுவனம் காலி செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த 14வது சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்த இடத்திலிருந்து ஈகிள் பிளாஸ்க் நிறுவனத்தை 2 மாதங்களில் அகற்ற டான்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
[10/02, 15:24] sekarreporter1: எந்த பணிகளும் செய்யாமல் பணி நடந்துள்ளதாக கணக்கு காட்டி ரூ.2 கோடியே 48 லட்சத்து 68,692 பணத்தை எடுத்ததாக ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் மீது தொடரப்பட்ட வழக்கில் ராணிப்பேட்டை கலெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா பெரிய எசலபுரம் கிராமத்தை சேர்ந்த எம்.ராமசந்திரன் தாக்கல் செய்த மனுவில், அரக்கோணம் தாலுகாவுக்கு உட்பட்ட இச்சிபுத்தூர் கிராமத்தில் மின் விளக்குகள் அமைத்து தருவது, ஆழ்துளை கிணறுகள், பம்பு செட்டுகள் உள்ளிட்ட பணிகளுக்காக கோடிக்கணக்கில் பணம் கையாளப்பட்டுள்ளது.
ஆனால், எந்த பணியும் செய்யப்படவில்லை. பணிகள் செய்யாமல் பணிகள் செய்யப்பட்டு அதற்காக அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற்றுள்ளதாக கூறி ரூ.2 கோடியே 48 லட்சத்து 68,692 ஊராட்சி பணம் ஊராட்சி தலைவர் பத்மநாபன் மற்றும் செயலாளர் இப்ராஹிம் ஆகியோரால் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி மாவட்ட கலெக்டர், பஞ்சாயத்து உதவி இயக்குநர், அரக்கோணம் பிடிஓ ஆகியோருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி மனு கொடுத்தேன். மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, அரசு பணத்தை முறைகேடாக எடுத்த இச்சிபுத்தூர் பஞ்சாயத்து தலைவரை தகுதி நீக்கம் செய்யுமாறும், செயலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிமன்றம் வழக்கை தள்ளிவைத்தது.
இந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி, பஞ்சாயத்து உதவி இயக்குநர் குமார், அரக்கோணம் பிடிஓ சுரேஷ் சவுந்தரராஜன் ஆகியோர் மீது ராமசந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, வழக்கறிஞர் பி.கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி, வேலையே நடக்காமல் பணம் கையாடல் செய்யப்பட்டதாக வாதிட்டு அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 19ம் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் உள்ளிட்டோர் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
[10/02, 15:24] sekarreporter1: தனது பெற்றோருக்கு பணம் அனுப்புவதை நிறுத்திய மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் கேப் டிரைவராக இருந்த ஜெயராஜும், வணிக வளாகம் ஒன்றில் காவலாளியாக இருந்த அவரது மனைவி இலக்கியாவும் வேளச்சேரி நேரு நகரில் வசித்து வந்தனர். பணியிலிருந்து தாமதமாக வரும் நாட்களிலும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாட்களிலும் கணவரிடம் பணம் கொடுக்கும் இலக்கியா பிரியாணி வாங்கி வர சொல்லி, இருவரும் சாப்பிட்டுள்ளனர்.

இதேபோன்று அடிக்கடி பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வரச் சொல்வதால் பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது, மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதால் தற்போது நல்ல சாப்பாடு சாப்பிடுவதாக இலக்கிய கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயராஜ் திட்டியதால், ஆத்திரமடைந்த இலக்கியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.

பின்பு சமாதானம் அடைந்து இருவரும் உறங்கிய நிலையில், நள்ளிரவில் விழித்த ஜெயராஜ் இலக்கியாவை கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல செட் அப் செய்து, பிறரை நம்ப வைத்துள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பரில் நட்ந்த இந்த சம்பவம் தொடர்பாக இலக்கியாவின் வளர்ப்புத்தாய் மணிமொழி அளித்த புகாரில் கிண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H.முகமது பாருக் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் B.ஆர்த்தி ஆஜராகி வாதிட்டார்

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜெயராஜ் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையில் 10 ஆயிரம் ரூபாயை இலக்கியாவின் வளர்ப்பு தாயிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
[10/02, 15:25] sekarreporter1: நன்னடத்தையின் அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காத நிலையில், உயர்நீதிமன்றம் பரீசிலிக்க முடியுமா? என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதிகளாக நீண்டகாலம் சிறையில் உள்ள எஸ். ஏ பாஷா,சாகுல் அமீது ,ஜாகீர் உசேன்,விஜயன், பூரிகமல் உள்ளிட்ட 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்திருந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான பரித்துரை ஆளுநர் முன் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலருக்கு இடைக்கால ஜாமீனும், ன் சிலருக்கு விடுப்பு வழங்கியும் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே விடுப்பில் உள்ள 10 பேர் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்
நீண்ட நாள் சிறைவாசிகள் ஷம்மா உள்ளிட்ட இருவரின் விடுப்பை நீடிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணை வந்தது.

விடுப்பை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரை ஆளுநர் முன் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றமே பரிசீலிக்க முடியுமா என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், அரசிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என்றும் ஆளுநரிடம் மட்டுமே நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்டினார் .

இதையடுத்து, முன்கூட்டி விடுதலை செய்வது குறித்த தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[10/02, 15:40] sekarreporter1: சென்னை, பிப். 11: பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பயன்படுத்திவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் தாலுகா பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது தாத்தாவுக்கு இதே கிராமத்தில் 1.12 ஏக்கர் பஞ்சமி நிலத்தை அரசு வழங்கியது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்ற பட்டியலின மக்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட இந்த பஞ்சமி நிலத்தை காமராஜின் தாத்தா கடந்த 1963ல் பட்டியலினத்தை சேராத பெருமாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
கடந்த 2009 முதல் 2021வரை பல்வேறு கட்டங்களில் இந்த நிலத்திற்கு விற்பனை ஒப்பந்தங்கள் நடந்துள்ளன.

இதையடுத்து, இந்த விற்பனை ஒப்பந்தங்களை ரத்து செய்ய கோரியும், பஞ்சமி நிலத்தை மீட்க கோரியும் ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு காமராஜ் மனு அனுப்பினார். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தனது மனுவை பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி காமராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்டி.ஞான பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, \” பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பட்டியலினம் சாராத பிரிவினருக்கு விற்பனை ஒப்பந்தம் செய்தது சட்டவிரோதமான செயலாகும். இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதை கண்காணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர். இந்த நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு பலர் இந்த இடத்தில் வீடுகளையும் கட்டியுள்ளனர். சமீபத்தில்தான் இந்த விபரம் மனுதாரருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கடந்த 2022ல் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

மனுதாரர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்றுள்ள ஆவணங்களின்படி மனுதாரர் குறிப்பிடும் நிலம் பஞ்சமி நிலம் என்பது தெளிவாகிறது. பட்டியலினத்தவர்களுக்காக வகைப்படுத்தப்பட்ட இந்த நிலத்ைத வேறு சமூக மக்கள் பயன்படுத்த முடியாது. இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரம் இல்லை.
எனவே, மனுதாரர் குறிப்பிட்டுள்ள பஞ்சமி நிலத்தை பயன்படுத்திவரும் நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும். அந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அந்த நிலத்தை வருவாய் பதிவேடு ஆவணங்களில் பஞ்சமி நிலம் என்று பதிவு செய்து தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்\” என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
[10/02, 15:40] sekarreporter1: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி மார்க்ஸ் என்பவர் 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர், வேளாண் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக அரசு உரிமம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் எந்தப் பணிகளும் துவங்கப்படவில்லை என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டம் என்ற சட்டத்தை தமிழக இயற்றியுள்ளதாகவும், இந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இதுநாள் வரை எந்த புதிய உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
[10/02, 15:50] sekarreporter1: https://youtu.be/G94JqN_Vv74?si=ZYNoc3sALutaEgpo
[10/02, 19:32] sekarreporter1: [10/02, 19:29] sekarreporter1: [10/02, 19:19] K. Chandru Former Judge Of Highcourt: https://www.vikatan.com/government-and-politics/justice-k-chandru-talks-about-palani-murugan-temple
[10/02, 19:29]
[10/02, 19:31] sekarreporter1: “
100
SUBSCRIBE
1 மாத டிஜிட்டல் சந்தா முற்றிலும் இலவசம் Install App
x

Government And Politics
‘ஸ்ரீமதிகள், ரமணியம்மாளைக் கேட்க வேண்டும்!’
கே.சந்துரு
ஈ.ஜெ.நந்தகுமார்
3 Min Read
மேனாள் நீதிபதி, கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றம்

Published:Today at 3 AM
Updated:Today at 3 AM

பழநி முருகன் கோயில்
Join Our Channel
4
பெங்களூரு ரமணியம்மாளின் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கு, 1960-களில் பெருங்கூட்டமே சேரும். அவர் தன்னுடைய கம்பீரமான குரலில், “பால் மணக்குது பழம் மணக்குது…” என்று உச்ச ஸ்தாயியில் பாடலை ஆரம்பித்தால் கூட்டமே சாமியாடும். “தேன் இருக்குது தினை இருக்குது…. தென் பழநியிலே… தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்” என்று அவர் விடுக்கும் வேண்டுகோளில் எந்த இடத்திலும், ‘பழநி மலைக்கு இந்துக்களே வாருங்கள்…’ என்று இருக்காது.

பழநி முருகன் கோயிலைப் பற்றிப் பல செய்திகள் உண்டு. பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு மகாத்மா காந்தியடிகள் தேச விடுதலையின் ஒரு பகுதியாக, சமூக விடுதலைக்கும் செயல்பட முற்பட்டார். அதன் பகுதியாகத்தான், அரிஜன சேவா சங்கம்’ 1932-ல் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்தின் கொள்கையை விளக்குவதற்கும், அதற்கு நிதி திரட்டுவதற்கும் தமிழ்நாட்டில் ஒரு சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டார் காந்தி. தென் தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது பயணத்தில் நீலமலைக்குச் சென்று திரும்பும் வழியில், பழநிமலை அடிவாரத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடானது. காந்தியின் அன்பர்கள் பழநி முருகனை தரிசிக்க அவரை அழைத்தனர். காந்தி எங்கு சென்றாலும் அங்கிருக்கும் கோயில்களுக்கு விஜயம் செய்யாமல் இருந்ததில்லை. ஆனால் ஒரு நிபந்தனை.அந்தக் கோயில்களில் தலித் மக்களை அனுமதிப்பார்களா, இல்லையா…’ என்ற கேள்விக்கான பதிலைப் பொறுத்தே அவரது முடிவு இருக்கும்.

Pause

Unmute
Remaining Time -9:55


https://www.vikatan.com/government-and-politics/justice-k-chandru-talks-about-palani-murugan-temple#:~:text=100,%2D9%3A55
[10/02, 21:21] sekarreporter1: OkDETAILS OF THE MARKS OBTAINED BY THE CANDIDATES BOTH IN THE MAIN WRITTEN EXAMINATION HELD ON 04/11/2023 FN & AN AND 05/11/2023 FN & AN AND THEORAL TEST HELD FROM 29/01/2024 TO 10/02/2024 FN (EXCEPT 03/02/2024 AND 04/02/2024) RELATING TO THE POST OF CIVIL JUDGE IN THE TAMIL NADU STATE JUDICIAL SERVICE (NOTIFICATION NO. 12/2023) https://sekarreporter.com/details-of-the-marks-obtained-by-the-candidates-both-in-the-main-written-examination-held-on-04-11-2023-fn-an-and-05-11-2023-fn-an-and-theoral-test-held-from-29-01-2024-to-10-02-2024-fn-except-03/
[11/02, 07:09] sekarreporter1: https://youtu.be/Vl-4nLsUXnM?si=BH07EbGp29t1hbut
[11/02, 07:10] sekarreporter1: https://youtu.be/5mQQZw492GQ?si=wf8oa8GroLlj9c9n
[11/02, 10:17] sekarreporter1: :THE HONOURABLE MR.JUSTICE D.KRISHNAKUMAR andTHE HONOURABLE MR.JUSTICE R.VIJAYAKUMARW. P.(MD) No.2686 of 2024andW.M.P.(MD) No.2701 of 2024S.Chithra … Petitioner-vs-1.The TahsildarPalani Taluk Office Dindigul District2.The Executive Officer / Joint CommissionerHindu Religious andCharitable Endowments DepartmentArulmighu Dhandayuthapani ThirukovilPalani Town and Taluk Dindigul Distric https://sekarreporter.com/the-honourable-mr-justice-d-krishnakumar-andthe-honourable-mr-justice-r-vijayakumarw-p-md-no-2686-of-2024andw-m-p-md-no-2701-of-2024s-chithra-petitioner-vs-1-the-tahsildarpalani-taluk/

You may also like...