Nskj order அமைச்சர் உதயநிதிக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
Nskj
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேடிக்கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து, பெருமழை பாதிப்பு காரணமாக வழக்கறிஞர்கள் ஆஜராகாவிட்டால் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்படாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதால், வழக்கை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிபதி, உதயநிதிக்கு எதிரான இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

You may also like...