Plastic case svnj bench order நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா வேதனை more plastic in train gov aag ravinthiren filed report

பிளாஸ்டிக் பயன்பாட்டை இரயில்வே நிர்வாகம் ஊக்குவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட்ட நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு, பிளாஸ்டிக் பயன்பாட்டையும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரயில்வே நிர்வாகம் செயல்படுவதாக அதிருப்தி
தெரிவித்தனர். தற்போது புதிதாக அறிமுகப் படுத்திய வந்தே பாரத் இரயில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள ளது. ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முன்மாதிரியாக செயல்பட வேண்டிய இரயில் நிர்வாகம் அதனை கடைபிடிக்க வில்லை என தெரிவித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் பயன்பட்டை தடுப்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இரயில்வே நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், ஒரு முறை பயன்படுத்தகூடிய பிளாஸ்டிக் விற்பனை செய்வது தெடர்பாக முதல் முறை பிடிபட்டால் அபராதம் இரண்டாவது முறை பிடிபட்டால் கடைக்கு சீல் வைப்பது வணிக உரிமம் புதுப்பிக்கபட மாட்டாது என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் சென்னை கோயம்பேடு பகுதி வணிக நிறுவனங்களில் அமல்படுத்தியதாக தெரியவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 430 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யபடுவதாகவும் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிளாஸ்டிக் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி குப்பையில் வீசுவதாக தெரிவித்த நீதிபதிகள் இந்த குப்பைகள் நீர் வழித்தடம் மற்றும் காற்றின் மூலமாக ஆறுகள் நீர்நிலைகள் சென்றடைகிறது இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்தனர். முன்னோர்கள் காலத்தில் தண்ணீரை ஆறுகளில் பார்த்ததாகவும், தந்தை காலத்தில் கிணறுகளில் பார்த்ததாகவும் தற்போதைய காலத்தில் குழாய்களில் பார்ப்பதாகவும், மகன்கள் காலத்தில் பாட்டில்களில் பார்க்கப்படுவதாகவும் பேரக்குழந்தைகள் காலத்தில் சிறு குப்பைகளில் பார்க்கும் நிலை தடுக்க வேண்டும் என தெரிவித்தார். நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நீதிபதிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் நீரின் தேவையை தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகள் மூலமாக தண்ணீர் மாசு படுவதாகவும் நீதிகள் தெரிவித்தனர். மேலும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் பிரபல நிறுவனங்கள், அனைத்தும் பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் தெரிவித்த நீதிபதிகள் தினமும் பயன்படுத்தக்கூடிய சோப்பு, போன்ற நிறுவனங்களும் பிளாஸ்டிக் அதிகளவில் வைத்திருப்பதாகவும் கூறினார்.

பால், பழம், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தற்பொழுது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வருவதாகவும் இது மனித உயிருக்கு ஆபத்தாகவும் அடுத்த தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இது போன்ற பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளும் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், பிளாஸ்டிக் தடை உத்தரவுகள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஆனால் அந்த நடவடிக்கைகள் எல்லாம் ஆமை வேகத்தில் தான் உள்ளதாக கருத்து தெரிவித்தனர். சிறு கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கில்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் பழங்கள், காய்கறி விற்பனை கடைகள் ஆகியவற்றில் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டுகளை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You may also like...