Smsj உத்தரவில், குடிமக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கத்துடனே, பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் சில தகுதித் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகள் அரசால் நடத்தப்படுகின்றன என்றும், தவறான முறையில் அனுதாபம் காட்டுவது அல்லது மென்மையான போக்கை கடைபிடிப்பது என்ற முடிவை நீதிமன்றங்கள் எடுத்தால், அப்படிப்பட்டவர்களின் திறமையின்மையில் பங்களிப்பதாகிவிடும் என்றும், நீதிமன்றங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் புதிய வழக்கு தொடரும் நடைமுறைகளை சில வழக்கறிஞர்கள் பரிந்துரைப்பதை தடுக்க, உயர் நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் தகுதி பெறாதவர்களுக்கு அனுதாபம் காட்டுவதும், மென்மையான போக்கை கடைபிடிப்பதும், திறமையின்மைக்கு நீதிமன்றமே துணை நிற்பதாகிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா மற்றும் அருள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் 2007ஆம் ஆண்டு வருவாய்த் துறையில் நியமிக்கப்பட்டனர். டிராப்ட்மென் ஆக சுஜாதாவும், நில அளவையராக அருளும் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தகுதியை பெறவில்லை என கூறி பணியிலிருந்து, 2015ஆம் அண்டு பிப்ரவரி மாதம் நீக்கப்பட்டனர்.

பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, துறை ரீதியான தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். நான்கு தேர்வு தாள்களில் ஒரு தாளில் மட்டும் தேர்ச்சி பெறாமல் இருந்த நிலையில், மீண்டும் வாய்ப்பு வழங்காமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளில் பணிக்கான தகுதியை பெற வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டதாகவும், அதன்படி பூர்த்தி செய்யாததால் இருவருக்கும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பணிக்கான தகுதியை உரிய காலத்தில் பெறாததன் அடிப்படையில், விதிகளுக்கு உட்பட்டே பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், உரிய நோட்டீஸ் அனுப்பிய பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி, இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவரது உத்தரவில், குடிமக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கத்துடனே, பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் சில தகுதித் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகள் அரசால் நடத்தப்படுகின்றன என்றும், தவறான முறையில் அனுதாபம் காட்டுவது அல்லது மென்மையான போக்கை கடைபிடிப்பது என்ற முடிவை நீதிமன்றங்கள் எடுத்தால், அப்படிப்பட்டவர்களின் திறமையின்மையில் பங்களிப்பதாகிவிடும் என்றும், நீதிமன்றங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் புதிய வழக்கு தொடரும் நடைமுறைகளை சில வழக்கறிஞர்கள் பரிந்துரைப்பதை தடுக்க, உயர் நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...