சமூக ஊடகங்கள் வாயிலான குற்றச்செயல்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திரு.பி.வில்சன் அவர்கள் பாராளுமன்றத்தில் இன்று சிறப்புத் தீர்மானம்!

சமூக ஊடகங்கள் வாயிலான குற்றச்செயல்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திரு.பி.வில்சன் அவர்கள் பாராளுமன்றத்தில் இன்று சிறப்புத் தீர்மானம்!

வதந்திகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரத்தை பரப்புவதற்கு தீய சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றன என்பது பொதுவான அம்சமாகும்..
இந்த சமூக ஊடக வலைதளங்கள் வார்த்தைகள், சொற்றொடர்களை பகுப்பாய்வு செய்ய படிமுறைத்தீர்வுகளை பயன்படுத்துவதோடு, பிரபலமானவைகளின் வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட தலைப்புகளின் பட்டியலை உருவாக்க ஹேஷ்டேகுகளை பயன்படுத்துகின்றன..
அவர்களின் வணிக மாதிரியானது, அதிகரித்துவரும் ஒட்டுமொத்த ஈடுபாட்டின் அடிப்படையில் வளர்கிறது..
இருப்பினும் இத்தகைய கும்பல் மன நிலைக்கு உணவளிப்பதன் மூலம், இது வெறுப்பு, மதவெறி மற்றும் வதந்திகளை பரப்ப உதவுகிறது.

ஈடுபாடுகளின் மீது செல்வாக்கு செலுத்தவும், குறிப்பிட்ட நபர்கள் அல்லது சமூகங்களை குறிவைத்து கேலி செய்யவும் தானியங்கி Bot மென்பொருள் கணக்குகளை பயன்படுத்துவதன் மூலம் நிலைமை இன்னும் மோசமாகிறது..

தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பெரும்பாலும் போலி செய்திகள் மற்றும் அவதூறான உள்ளடக்கத்தை பரப்புவதன் மூலம் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் சமூகங்களை குறிவைக்கவும், இழிவுபடுத்தவும், மற்றவர்களைத் தூண்டுகிறார்கள்.
பெரும்பாலும் அவர்கள் பொதுப்பொறுப்பில் இருப்பவர்களையும் நீதித்துறை உள்ளிட்ட அரசமைப்பு செயற்பாட்டாளர்களையும் குறிவைக்கின்றனர்.
இத்தகைய BOT கணக்குகளை அதிருப்தியாளர்கள் மற்றவர்களை கேலி செய்வதற்கும், விமர்சனங்களை ஒடுக்குவதற்கும் பயண்படுத்துவது வெளிப்படையான இரகசியமாகும்.. பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகும் நேரத்தில் அவர்களின் பாதிப்புகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு முடிந்துவிட்டிருக்கிறது..
தற்போது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 A, அதன் பலவீனங்கள் காரணமாக உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய எந்த தண்டனை விதிகளும் இல்லை.

நபர்களை இழிவுபடுத்தும் அல்லது குற்றச்செயல்களைத் தூண்டும் அல்லது கலவரங்களைத தூண்டும் அல்லது மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் அத்தகைய பதிவுகளின் பரவலை உடனடியாகக் குறைப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இருப்பது அவசியமாகும்.
எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000- ல், காலத்தின் தேவை கருதி கடுமையான தண்டனை விதிகளுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாய் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

You may also like...