Nakiren Dmk: அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் சட்டக் கருத்தரங்கம் ************************* கழக வழக்கறிஞர்களுக்கும், மாநில சுயாட்சி ஆர்வலர்களுக்கும் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் அழைப்பு, அறிக்கை:

  • [1/19, 11:38] Nakiren Dmk: அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் சட்டக் கருத்தரங்கம் ************************* கழக வழக்கறிஞர்களுக்கும், மாநில சுயாட்சி ஆர்வலர்களுக்கும் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் அழைப்பு, அறிக்கை: ************************* அன்பிற்கினிய வழக்கறிஞர் பெருமக்களுக்கு வணக்கம் 🙏. *பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்கள் கண்ட கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களில் முக்கிய முழக்கமான ” மாநில சுயாட்சி” ” மத்தியில் கூட்டாட்சி ” என்னும் கொள்கை பிரகடனத்திற்கு* ஊறு விளைவிக்கும் அடாவடி ஆளுநரின் அத்து மீறல்களை தோலுரித்து, சனாதன சங்கிகளின் சதிராட்டத்தை வேரறுக்க, அரசியலமைப்பு சட்டத்தில்” ஆட்டுக்குத் தாடி போல ” உள்ள ஆளுநரின் அதிகார வரம்பு எல்லை எது என்பதனை எடுத்துரைக்க சட்டக் கருத்தரங்கு நமது கழக சட்டத்துறையின் செயலாளர், ஆற்றல் மிகு செயல் வீரர், மூத்த வழக்கறிஞர் *திரு N. R. இளங்கோ எம் பி* அவர்களது சீரிய தலைமையில் வரும் *ஜனவரி 20 ஆம் தேதி மாலை சென்னையிலும், 21 ஆம் தேதி மாலை தீரர் கோட்டமாம் திருச்சியிலும், 22 ஆம் தேதி மாலை சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரிலும்* நடைபெற உள்ளது. கழக வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் வரவேற்புரை ஆற்றிடவும், முன்னிலை வகிக்கவும், நிகழ்வு ஏற்பாடுகளை சிறப்பிக்க உள்ளார்கள், மாவட்ட வழக்கறிஞர் அணியினர் பெரும் முனைப்புடன் செயலாற்றி, பங்கு பெற உள்ளார்கள். ” கழகத்திற்கு ஒரு இடையூறு” என்று சொன்னால் என்றைக்கும் அது அண்ணன்( நினைவில் வாழும்) *N V N சோமு, அண்ணன் ஆலந்தூர் R. S. பாரதி, அன்பு சகோதரர் இரா. கிரிராஜன் எம் பி* ஆகியோர் *சட்டத்துறை செயலாளராக இருந்து* பல்வேறு சமயங்களில் காலம் கருதி சட்டக் கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார்கள், என்பதை இந்த நேரத்தில் நாம் மறத்தலாகாது, *உயிரணைய நம் தலைவர் அவர்களது ஆணைக்கிணங்க* தலைமைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருவாளர்கள் T. R. பாலு, அமைச்சர் எஸ். ரகுபதி, ஆ. ராசா, திருச்சி N. சிவா, N. R. இளங்கோ, P. வில்சன் ஆகியோர் குடியரசு தலைவரிடம் தலைவர் அவர்களது ஆளுநர் குறித்த நிலைப்பாட்டு கடிதத்தினை மேல் நடவடிக்கை கேட்டு அளித்துள்ளார்கள் என்பதும் நாம் அறிந்ததே, இவ்வமயம் மேற்படி மாநகரங்களில் நடைபெற உள்ள சட்டக் கருத்தரங்குகளில் திராவிட இயக்க ஆசிரியர் கி. வீரமணி, மாண்புமிகு நீதி அரசர்கள் அக்பர் அலி, கே. சந்துரு, ஏ கே ராஜன், திருச்சி N. சிவா, மூத்த வழக்கறிஞர் இரா. விடுதலை, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகிய பெருமக்கள் சிறப்புரையாற்றி அரசியலமைப்பின் சட்ட விளக்கங்களையும், ஆளுநர்களின் அதிகார வரம்புகளையும், கண் துஞ்சாது *மக்கள் பணியாற்றும் 21ம் நூற்றாண்டின் உலகத் தமிழர்களின் ஈடு இணையற்ற தலைவராம் நம் மாண்புமிகு முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலின்* அவர்கள் காலத்தில் செய்த மதி யூக சட்டமன்ற முன்னெடுப்பு தீர்மானம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக சொல்லரங்கம் நடத்த இருக்கின்றார்கள். அவ்வமயம் மூத்த வழக்கறிஞர்களும், கழக வழக்கறிஞர்களும், மகளிர் வழக்கறிஞர்களும், சகோதரிகளும், கழக கூட்டணி வழக்கறிஞர்களும், சட்டக் கல்வி மாணவர்களும், மாநில சுயாட்சி விரும்பும் அரசியல் ஆர்வலர்களும், கழக முன்னோடிகளும் தமக்கு அருகில் உள்ள மூன்று மாநகரங்களில் நடைபெறும் மேற்படி *சட்டக் கருத்தரங்கத்தில்* பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏 நன்றி *வெல்க தமிழ்நாடு! தலைவர் புகழ் ஓங்குக!!* அன்புடன்: *கழக வழக்கறிஞர்* நாமக்கல் *இரா. நக்கீரன், எம் ஏ, பி எல், கழக சட்ட திட்டத் திருத்த குழு உறுப்பினர்*, *திராவிட முன்னேற்ற கழகம்*.🙏
    [1/19, 11:39] sekarreporter1: 💐

You may also like...